தமிழ் மொழியின் வரலாறு
A History of the Tamil Language
தமிழ் உலகின் மிகப் பழமையான உயிருள்ள மொழிகளுள் ஒன்று. இன்றும் பேசப்படும் மொழிகளில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சியான இலக்கியப் பாரம்பரியம் கொண்ட மொழிகள் மிகச் சிலவே. தமிழ் அவற்றுள் ஒன்று.
பழந்தமிழ்க் காலம் - கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை. இக்காலத்தில் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலும், சங்கப் பாடல்களும், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவையும் தோன்றின. தமிழ்-பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இக்காலத்தைச் சேர்ந்தவை.
இடைக்காலம் - ஆறாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை. பக்தி இயக்கம் தமிழ் இலக்கியத்தை மாற்றியது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் எளிய மக்கள் மொழியில் பாடினர். கம்பராமாயணம், பெரியபுராணம் போன்ற பெருங்காப்பியங்கள் இக்காலத்தில் எழுந்தன. சோழர் காலக் கல்வெட்டுகள் தமிழ் உரைநடையின் வளர்ச்சியைக் காட்டுகின்றன.
தற்காலம் - பதினாறாம் நூற்றாண்டு முதல் இன்று வரை. அச்சு இயந்திரம் வந்ததும் தமிழ் நூல்கள் பரவலாகக் கிடைத்தன. உ.வே.சாமிநாதையர் ஓலைச்சுவடிகளைத் தேடி சங்க நூல்களை மீட்டெடுத்தார். அவர் இல்லாவிட்டால் பல நூல்கள் அழிந்திருக்கும். பாரதியார் கவிதையின் மொழியை மக்கள் மொழிக்கு நெருக்கமாக்கினார்.
2004ஆம் ஆண்டு தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டது. ஒரு மொழி செம்மொழி ஆவதற்கு அது பழமையானதாகவும், சுயமான இலக்கியப் பாரம்பரியம் கொண்டதாகவும், பிற மொழியிலிருந்து கடன் வாங்காத அடிப்படை அமைப்பைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
இன்று தமிழ் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அரசு மொழி. மலேசியா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவலாகப் பேசப்படுகிறது. ஏறக்குறைய எட்டு கோடி மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.
ஒரு மொழி வாழ்வது அதைப் பேசுபவர்களால் மட்டும் அல்ல; அதில் எழுதுபவர்களாலும் படிப்பவர்களாலும்தான்.
சொற்கள் - Word list
வரலாறு
varalaaru
history
செம்மொழி
semmozhi
classical language
கல்வெட்டு
kalvettu
stone inscription
ஓலைச்சுவடி
olaichuvadi
palm-leaf manuscript
பாரம்பரியம்
paaramabariyam
tradition
தாய்மொழி
thaaimozhi
mother tongue
புரிந்ததா? - Check your understanding
No account needed. Answer, then press check - if you are logged in, your result is saved to your learning history.
1. தமிழ் எந்த ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?
2. சங்க நூல்களை ஓலைச்சுவடியிலிருந்து மீட்டெடுத்தவர் யார்?
3. பக்தி இயக்கம் தமிழ் இலக்கியத்தில் என்ன மாற்றத்தைக் கொண்டுவந்தது?