தமிழ்.academy
☰
Share:

அன்றாடத் தமிழ்

100 Everyday Tamil Sentences

Listen to each sentence in Tamil, then hear what it means in your language. Pick any language below - English is the default. Tap Word by word to learn every word.

🙏 வணக்கமும் மரியாதையும் - Greetings and politeness

  1. 1

    வணக்கம்!

    Vanakkam!

    Hello!

  2. 2

    நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

    Neengal eppadi irukkireergal?

    How are you?

  3. 3

    நான் நன்றாக இருக்கிறேன்.

    Naan nandraaga irukkiren.

    I am fine.

  4. 4

    மிக்க நன்றி.

    Mikka nandri.

    Thank you very much.

  5. 5

    மன்னிக்கவும்.

    Mannikkavum.

    Sorry. / Excuse me.

  6. 6

    தயவுசெய்து உட்காருங்கள்.

    Thayavuseidhu utkaarungal.

    Please sit down.

  7. 7

    உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

    Ungalai sandhiththadhil magizhchi.

    Nice to meet you.

  8. 8

    காலை வணக்கம்.

    Kaalai vanakkam.

    Good morning.

  9. 9

    இனிய இரவு.

    Iniya iravu.

    Good night.

  10. 10

    மீண்டும் சந்திப்போம்.

    Meendum sandhippom.

    See you again.

🙂 என்னைப் பற்றி - About me

  1. 11

    என் பெயர் அருண்.

    En peyar Arun.

    My name is Arun.

  2. 12

    உங்கள் பெயர் என்ன?

    Ungal peyar enna?

    What is your name?

  3. 13

    எனக்கு எட்டு வயது.

    Enakku ettu vayadhu.

    I am eight years old.

  4. 14

    நான் கனடாவில் வசிக்கிறேன்.

    Naan Kanadaavil vasikkiren.

    I live in Canada.

  5. 15

    நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?

    Neengal engirundhu varugireergal?

    Where are you from?

  6. 16

    நான் தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

    Naan Thamizh katrukkondirukkiren.

    I am learning Tamil.

  7. 17

    எனக்குக் கொஞ்சம் தமிழ் தெரியும்.

    Enakku konjam Thamizh theriyum.

    I know a little Tamil.

  8. 18

    நான் ஒரு மாணவன்.

    Naan oru maanavan.

    I am a student (boy).

  9. 19

    நான் ஒரு மாணவி.

    Naan oru maanavi.

    I am a student (girl).

  10. 20

    எனக்கு ஒரு தம்பி இருக்கிறான்.

    Enakku oru thambi irukkiraan.

    I have a younger brother.

💬 புரிந்துகொள்ளுதல் - Understanding each other

  1. 21

    எனக்குப் புரியவில்லை.

    Enakku puriyavillai.

    I don't understand.

  2. 22

    மெதுவாகப் பேசுங்கள்.

    Medhuvaagap pesungal.

    Please speak slowly.

  3. 23

    மீண்டும் சொல்லுங்கள்.

    Meendum sollungal.

    Please say it again.

  4. 24

    இதற்குத் தமிழில் என்ன?

    Idharkuth Thamizhil enna?

    What is this in Tamil?

  5. 25

    இதன் பொருள் என்ன?

    Idhan porul enna?

    What does this mean?

  6. 26

    உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?

    Ungalukku aangilam theriyumaa?

    Do you know English?

  7. 27

    எனக்குத் தெரியாது.

    Enakkuth theriyaadhu.

    I don't know.

  8. 28

    சரி, புரிந்தது.

    Sari, purindhadhu.

    Okay, I understood.

  9. 29

    ஒரு நிமிடம் காத்திருங்கள்.

    Oru nimidam kaaththirungal.

    Please wait a minute.

  10. 30

    எனக்கு உதவி செய்வீர்களா?

    Enakku udhavi seiveergalaa?

    Will you help me?

🏠 வீட்டில் - At home

  1. 31

    அம்மா, எனக்குப் பசிக்கிறது.

    Amma, enakkup pasikkiradhu.

    Mum, I am hungry.

  2. 32

    எனக்குத் தண்ணீர் வேண்டும்.

    Enakkuth thanneer vendum.

    I want water.

  3. 33

    சாப்பாடு தயாரா?

    Saappaadu thayaaraa?

    Is the food ready?

  4. 34

    நான் தூங்கப் போகிறேன்.

    Naan thoongap pogiren.

    I am going to sleep.

  5. 35

    கை கழுவிவிட்டு வா.

    Kai kazhuvivittu vaa.

    Wash your hands and come.

  6. 36

    விளக்கை அணைத்துவிடு.

    Vilakkai anaiththuvidu.

    Switch off the light.

  7. 37

    கதவைத் திற.

    Kadhavaith thira.

    Open the door.

  8. 38

    அப்பா எங்கே?

    Appaa enge?

    Where is Dad?

  9. 39

    பாட்டி வீட்டுக்கு வருகிறார்.

    Paatti veettukku varugiraar.

    Grandma is coming home.

  10. 40

    நான் என் அறையில் இருக்கிறேன்.

    Naan en araiyil irukkiren.

    I am in my room.

🍛 உணவு - Food and eating

  1. 41

    சாப்பாடு மிகவும் சுவையாக இருக்கிறது.

    Saappaadu migavum suvaiyaaga irukkiradhu.

    The food is very tasty.

  2. 42

    எனக்கு இட்லி பிடிக்கும்.

    Enakku idli pidikkum.

    I like idli.

  3. 43

    இன்னும் கொஞ்சம் வேண்டும்.

    Innum konjam vendum.

    I want a little more.

  4. 44

    போதும், நன்றி.

    Podhum, nandri.

    That's enough, thank you.

  5. 45

    இது காரமாக இருக்கிறது.

    Idhu kaaramaaga irukkiradhu.

    This is spicy.

  6. 46

    எனக்கு ஒரு காபி வேண்டும்.

    Enakku oru kaapi vendum.

    I would like a coffee.

  7. 47

    நீங்கள் சாப்பிட்டீர்களா?

    Neengal saappitteergalaa?

    Have you eaten?

  8. 48

    நான் சைவம் மட்டும் சாப்பிடுவேன்.

    Naan saivam mattum saappiduven.

    I only eat vegetarian food.

  9. 49

    பில் கொண்டு வாருங்கள்.

    Bil kondu vaarungal.

    Please bring the bill.

  10. 50

    வாருங்கள், சேர்ந்து சாப்பிடலாம்.

    Vaarungal, serndhu saappidalaam.

    Come, let's eat together.

🏫 பள்ளியில் - At school

  1. 51

    நான் பள்ளிக்குப் போகிறேன்.

    Naan pallikkup pogiren.

    I am going to school.

  2. 52

    ஆசிரியர், எனக்கு ஒரு கேள்வி.

    Aasiriyar, enakku oru kelvi.

    Teacher, I have a question.

  3. 53

    நான் கழிவறைக்குப் போகலாமா?

    Naan kazhivaraikkup pogalaamaa?

    May I go to the toilet?

  4. 54

    என் பென்சில் எங்கே?

    En pensil enge?

    Where is my pencil?

  5. 55

    நான் வீட்டுப்பாடம் முடித்துவிட்டேன்.

    Naan veettuppaadam mudiththuvitten.

    I have finished my homework.

  6. 56

    இன்று தேர்வு இருக்கிறது.

    Indru thervu irukkiradhu.

    There is a test today.

  7. 57

    இது எனக்குக் கடினமாக இருக்கிறது.

    Idhu enakkuk kadinamaaga irukkiradhu.

    This is hard for me.

  8. 58

    என் நண்பன் பெயர் ராமு.

    En nanban peyar Raamu.

    My friend's name is Ramu.

  9. 59

    நாம் விளையாடலாமா?

    Naam vilaiyaadalaamaa?

    Shall we play?

  10. 60

    பள்ளி மூன்று மணிக்கு முடியும்.

    Palli moondru manikku mudiyum.

    School finishes at three o'clock.

🚌 வெளியே - Out and about

  1. 61

    இது எவ்வளவு?

    Idhu evvalavu?

    How much is this?

  2. 62

    விலை கொஞ்சம் குறையுங்கள்.

    Vilai konjam kuraiyungal.

    Please lower the price a little.

  3. 63

    பேருந்து நிலையம் எங்கே இருக்கிறது?

    Perundhu nilaiyam enge irukkiradhu?

    Where is the bus station?

  4. 64

    நேராகப் போங்கள்.

    Neraagap pongal.

    Go straight.

  5. 65

    இடது பக்கம் திரும்புங்கள்.

    Idadhu pakkam thirumbungal.

    Turn left.

  6. 66

    வலது பக்கம் திரும்புங்கள்.

    Valadhu pakkam thirumbungal.

    Turn right.

  7. 67

    இங்கே நிறுத்துங்கள்.

    Inge niruththungal.

    Stop here, please.

  8. 68

    அது தூரமா?

    Adhu thooramaa?

    Is it far?

  9. 69

    நான் வழி தவறிவிட்டேன்.

    Naan vazhi thavarivitten.

    I am lost.

  10. 70

    கழிவறை எங்கே இருக்கிறது?

    Kazhivarai enge irukkiradhu?

    Where is the toilet?

⏰ நேரமும் நாளும் - Time and days

  1. 71

    இப்போது மணி என்ன?

    Ippodhu mani enna?

    What time is it now?

  2. 72

    இன்று என்ன நாள்?

    Indru enna naal?

    What day is it today?

  3. 73

    நாளை சந்திப்போம்.

    Naalai sandhippom.

    Let's meet tomorrow.

  4. 74

    நேற்று மழை பெய்தது.

    Netru mazhai peidhadhu.

    It rained yesterday.

  5. 75

    இன்று வெயில் அதிகம்.

    Indru veyil adhigam.

    It is very sunny today.

  6. 76

    இன்று குளிராக இருக்கிறது.

    Indru kuliraaga irukkiradhu.

    It is cold today.

  7. 77

    எனக்கு நேரம் ஆகிவிட்டது.

    Enakku neram aagivittadhu.

    I am getting late.

  8. 78

    சீக்கிரம் வா.

    Seekkiram vaa.

    Come quickly.

  9. 79

    ஐந்து நிமிடத்தில் வருகிறேன்.

    Aindhu nimidaththil varugiren.

    I will come in five minutes.

  10. 80

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    Iniya pirandhanaal vaazhththukkal!

    Happy birthday!

❤️ உணர்வுகள் - Feelings and health

  1. 81

    நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    Naan magizhchiyaaga irukkiren.

    I am happy.

  2. 82

    எனக்குக் களைப்பாக இருக்கிறது.

    Enakkuk kalaippaaga irukkiradhu.

    I am tired.

  3. 83

    எனக்கு உடம்பு சரியில்லை.

    Enakku udambu sariyillai.

    I am not feeling well.

  4. 84

    எனக்குத் தலை வலிக்கிறது.

    Enakkuth thalai valikkiradhu.

    I have a headache.

  5. 85

    கவலைப்படாதே.

    Kavalaippadaadhe.

    Don't worry.

  6. 86

    எனக்குப் பயமாக இருக்கிறது.

    Enakkup bayamaaga irukkiradhu.

    I am scared.

  7. 87

    உனக்கு என்ன ஆச்சு?

    Unakku enna aachu?

    What happened to you?

  8. 88

    நான் உன்னை நேசிக்கிறேன்.

    Naan unnai nesikkiren.

    I love you.

  9. 89

    நீ மிகவும் நல்லவன்.

    Nee migavum nallavan.

    You are very kind (to a boy).

  10. 90

    மருத்துவரைக் கூப்பிடுங்கள்.

    Maruththuvaraik kooppidungal.

    Please call a doctor.

⭐ பயனுள்ள வாக்கியங்கள் - Useful every day

  1. 91

    ஆமாம்.

    Aamaam.

    Yes.

  2. 92

    இல்லை.

    Illai.

    No.

  3. 93

    எனக்கு இது பிடிக்கும்.

    Enakku idhu pidikkum.

    I like this.

  4. 94

    எனக்கு இது பிடிக்காது.

    Enakku idhu pidikkaadhu.

    I don't like this.

  5. 95

    இது என்ன?

    Idhu enna?

    What is this?

  6. 96

    அவர் யார்?

    Avar yaar?

    Who is that?

  7. 97

    ஏன்?

    Aen?

    Why?

  8. 98

    பரவாயில்லை.

    Paravaayillai.

    It's okay. / Never mind.

  9. 99

    வாழ்த்துக்கள்!

    Vaazhththukkal!

    Congratulations!

  10. 100

    போய் வருகிறேன்.

    Poi varugiren.

    Goodbye (I'll go and come back).

Share:WhatsAppFacebookXTelegramEmail