தமிழ்நாட்டின் ஆறுகள்
The Rivers of Tamil Nadu
ஆறுகள் ஒரு நாட்டின் உயிர் நாடி. தமிழ்நாட்டின் நாகரிகம் ஆற்றங்கரைகளிலேயே வளர்ந்தது.
காவிரி தமிழ்நாட்டின் முக்கிய ஆறு. இது கர்நாடகத்தில் தலைக்காவேரியில் பிறந்து தமிழ்நாட்டின் வழியாகப் பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் காவிரியால் வளம் பெற்றது. அதனால் அதை "தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்" என்கிறார்கள்.
வைகை மதுரையின் வழியாகப் பாய்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் வைகைக் கரை விழாக்கள் பற்றி நிறையப் பாடல்கள் உள்ளன.
தாமிரபரணி திருநெல்வேலி பகுதியில் பாய்கிறது. இது ஆண்டு முழுவதும் நீர் ஓடும் ஆறு.
பாலாறு, பெண்ணையாறு, வெள்ளாறு ஆகியவையும் முக்கியமான ஆறுகள்.
ஆனால் இன்று பல ஆறுகள் மாசடைந்து இருக்கின்றன. தொழிற்சாலைக் கழிவும் நகரக் கழிவுநீரும் ஆற்றில் கலக்கின்றன.
ஆற்றைக் காப்பது நம் கடமை. ஏனெனில் ஆறு இல்லையேல் விவசாயம் இல்லை; விவசாயம் இல்லையேல் உணவு இல்லை.
சொற்கள் - Word list
ஆறு
aaru
river
நாகரிகம்
naagarigam
civilisation
நெற்களஞ்சியம்
netkalanjiyam
rice granary
விவசாயம்
vivasaayam
agriculture
கடமை
kadamai
duty
புரிந்ததா? - Check your understanding
No account needed. Answer, then press check - if you are logged in, your result is saved to your learning history.
1. தஞ்சாவூரை என்ன என்று அழைக்கிறார்கள்?
2. வைகை ஆறு எந்த நகரின் வழியாகப் பாய்கிறது?
3. காவிரி எந்தக் கடலில் கலக்கிறது?